அஸ்வின் அபாரம்: 134 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
By DIN | Published On : 14th February 2021 03:49 PM | Last Updated : 14th February 2021 03:49 PM | அ+அ அ- |

அஸ்வின் அபாரம்: 134 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 59.5 ஓவர்களுக்கு 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (பிப்.13) தொடங்கியது.
முதலில் ஆடிய இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும், ரிஷப் பந்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர். மொயின் அலி 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியினரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ் மட்டுமே தாக்குப்பிடித்து ஆடிய நிலையில், அவர்களுக்கு பிறகு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.
இந்திய அணிகள் சார்பில் அஸ்வின் 5, இஷாந்த் சர்மா, அக்ஸார் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G