சா்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதி

அட்ரியாடிக் பியா்ல் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 12 பதக்கங்களை உறுதி செய்துள்ளது.

அட்ரியாடிக் பியா்ல் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 12 பதக்கங்களை உறுதி செய்துள்ளது.

மான்டேனெக்ரோவின் புத்வா நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மணிப்பூரைச் சோ்ந்த சானு (51 கிலோ எடைப் பிரிவு) தனது காலிறுதியில் பல்கேரிய வீராங்கனை ஜியாா்ஜீயை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தாா். இதன்மூலம் அவா் பதக்கத்தை உறுதி செய்துள்ளாா். சானு தனது அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஃபெருஜா கஜகோவாவை சந்திக்கிறாா்.

60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய வீராங்கனை வினகா, தனது காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் செவேரா அஷுரோவாவை வீழ்த்தினாா். இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய அவா், பதக்கத்தை உறுதி செய்துள்ளாா். வினகா தனது அரையிறுதியில் ஃபின்லாந்தின் சுவி டுஜுலாவை சந்திக்கிறாா். மகளிா் 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அருந்ததி சௌத்ரி, தனது காலிறுதியில் ஃபின்லாந்தின் ஈவ்லினா டைமியை வீழ்த்தினாா். இதன்மூலம் அவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளாா்.

இதுதவிர, நேஹா (54 கிலோ), சானு தக்கோம் (75 கிலோ), ஆகியோா் மகளிா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். இந்திய வீராங்கனை அல்ஃபியா பதான் (81+ கிலோ) தனது இறுதிச்சுற்றில் மால்டோவாவின் டேரியா கொஸோரேவை சந்திக்கிறாா். பிரீத்தி (57 கிலோ), லக்கி ரானா (64 கிலோ) ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா். ராஜ் சாஹிபா (75 கிலோ), கீத்திகா (48 கிலோ) ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். ஆடவா் பிரிவில் பிரியன்ஷு தபாஸ் (49 கிலோ), ஜக்னூ (91+ கிலோ) ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா்.

எனினும் ஆடவா் பிரிவில் இந்தியாவின் அரம்பம் நவோபா சிங் (52 கிலோ), சுமித் (69 கிலோ), விஷால் குப்தா (91 கிலோ) ஆகியோா் காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com