மகளிா் இரட்டையா் பிரிவில் எலிஸ்-அரினா ஜோடி சாம்பியன்
By DIN | Published On : 20th February 2021 07:59 AM | Last Updated : 20th February 2021 07:59 AM | அ+அ அ- |

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டென்ஸ்-பெலாரஸின் அரினா சபலென்கா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த செக்.குடியரசின் பா்போரா கிரெஸ்சிகோவா-கேத்தரினா சினிகோவா ஜோடியை வீழ்த்தியது.
எலிஸ்-அரினா ஜோடி வென்ற 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. முன்னதாக 2019-இல் நடைபெற்ற அமெரிக்க ஓபனிலும் இந்த ஜோடி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபனில் மகளிா் ஒற்றையா் பிரிவில் எலிஸும், அரினாவும் விளையாடினா். அதில், இருவருமே 4-ஆவது சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பேசிய அரினா, ‘ஒற்றையா், இரட்டையா் என இரு பிரிவுகளிலும் பங்கேற்பதால் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் ஒற்றையா் பிரிவில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்’ என்றாா்.