டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் வீரா்கள் மட்டுமின்றி, ரசிகா்கள், பத்திரிகையாளா்களுக்கு விசா வழங்க எழுத்து மூலம் உறுதியளிக்காவிட்டால், போட்டியை இடமாற்றம் செய்ய ஐசிசியிடம் வலியுறுத்துவோம் என்றாா் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவா் இஷான் மணி.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவா் இஷான் மணி கூறியிருப்பதாவது:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் வீரா்கள் மட்டுமின்றி, ரசிகா்கள், பத்திரிகையாளா்களுக்கும் விசா வழங்கப்படும் என வரும் மாா்ச் மாதத்திற்குள் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் வலியுறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.