சி.எஸ்.கே.விற்காக விசில் போட வைப்பேன்: ராபின் உத்தப்பா
By DIN | Published On : 21st February 2021 02:44 PM | Last Updated : 21st February 2021 02:44 PM | அ+அ அ- |

மகிழ்ச்சியில் ராபின் உத்தப்பா
ஐ.பி.எல். தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக இருந்த ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று நிலையில், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். இதனால் ராஜஸ்தான் அணியில் இருந்த உத்தப்பாவை அதே விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் தெரிவித்துள்ளதாவது, ''வணக்கம் சென்னை. எல்லோருக்கும் மிக்க நன்றி. சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் எனது நீண்ட நாள் ஆசை, கனவு பலித்துள்ளது.
தோனியுடன் விளையாடி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. தோனி முழுமையாக ஓய்வு பெறும் முன்பு அவருடன் ஒருமுறையாவது விளையாட வேண்டும் என்று ஆசை இருந்தது. அந்த கனவு தற்போது நிறைவேறவுள்ளது.
சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு போன்ற வீரர்களுடன் விளையாடுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுரேஷ் ரெய்னாவுடன் U-17 முதல் விளையாடி வருகிறேன்.
சிஎஸ்கேவுடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்வேன். எனக்கு விசில் போடத் தெரியாது என்றாலும், என் விளையாட்டின் மூலம் உங்களை விசில் போட வைப்பேன்'' என்று கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...