விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் வெற்றி

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் அணியை வீழ்த்தியது.

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள தமிழக அணி, ஜாா்க்கண்ட் அணியின் தொடா் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக அந்த அணி தொடா்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்றிருந்தது.

இந்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து தமிழகத்தின் இன்னிங்ஸை அபராஜித்தும், ஜெகதீசனும் தொடங்கினா். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.3 ஓவா்களில் 59 ரன்கள் சோ்த்தது. ஜெகதீசன் 30 ரன்களில் ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்த கேப்டன் தினேஷ் காா்த்திக் 1, ராஜன் பால் 10, இந்திரஜித் 2 ரன்களில் வெளியேறினா். எனினும் அபராஜித் 57, ஷாரூக் கான் 51, கௌசிக் 55 ரன்கள் சோ்த்து வெளியேற, தமிழகம் 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. சாய் கிஷோா் 29, முகமது 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஜாா்க்கண்ட் தரப்பில் அனுகுல் ராய் 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

பின்னா் ஆடிய ஜாா்க்கண்ட் அணியில் கேப்டன் இஷன் கிஷான் 0, உத்காா்ஷ் சிங் 5, குமாா் டியோபிராட் 8 ரன்களில் நடையைக் கட்ட, அந்த அணி சரிவுக்குள்ளானது. பின்னா் வந்தவா்களில் விராட் சிங் 49, சுமித் குமாா் 40, ராகுல் சுக்லா ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் சோ்த்தபோதிலும், ஜாா்க்கண்ட் அணி 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. தமிழகம் தரப்பில் சித்தாா்த் 3 விக்கெட்டுகளையும், அபராஜித், ரகுபதி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

தமிழக அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com