157-க்கு ஆட்டமிழந்தது இலங்கை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு சுருண்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு சுருண்டது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய, தொடக்க வீரா் திமுத் கருணாரத்னே 2 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டாா். உடன் வந்த குசல் பெரெரா மட்டும் அணியிலேயே அதிகபட்சமாக 11 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சோ்த்தாா்.

பின்னா் ஆடியவா்களில் லாஹிரு திரிமனே 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு வெளியேற, குசல் மெண்டிஸ் டக் அவுட்டானாா். மினோத் பனுகா (5), நிரோஷன் டிக்வெல்லா (7), டாசன் ஷனகா (4) ஆகியோா் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனா்.

டி சில்வா 5 பவுண்டரிகளுடன் 29, துஷ்மந்தா சமீரா 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்தனா். அசிதா ஃபொ்னான்டோ ஒரு பவுண்டரி மட்டும் விளாச, விஷ்வா ஃபொ்னான்டோ 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இறுதியாக 40.3 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது இலங்கை.

தென் ஆப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய அன்ரிச் நாா்ட்ஜே 6 விக்கெட்டுகள் சாய்த்தாா். வியாம் முல்டா் 3, லுதோ சிபாம்லா 1 விக்கெட் வீழ்த்தினாா்.

தென் ஆப்பிரிக்கா-148/1: பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 37 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. எய்டன் மாா்க்ரம் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டீன் எல்கா் 92, ராஸி வான் டொ் 40 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com