2-ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் பாக். 297
By DIN | Published On : 04th January 2021 07:29 AM | Last Updated : 04th January 2021 07:29 AM | அ+அ அ- |

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 83.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது.
கிறிஸ்ட்சா்ச் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீசத் தீா்மானித்தது. பேட்டிங் செய்த பாகிஸ்தானில் தொடக்க வீரா் ஷான் மசூத் டக் அவுட்டாக, உடன் வந்த அபித் அலி 3 பவுண்டரிகள் உள்பட 25 ரன்கள் சோ்த்தாா். அணியிலேயே அதிகபட்சமாக, ஒன்-டவுனாக வந்த அஸாா் அலி 12 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்தாா்.
எஞ்சியோரில் ஹாரிஸ் சோஹைல் 1 ரன்னுக்கு வெளியேற, ஃபவாத் ஆலம் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். கேப்டன் முகமது ரிஸ்வான் 11 பவுண்டரிகளுடன் 61, ஃபஹீம் அஷ்ரஃப் 8 பவுண்டரிகளுடன் 48, ஜாஃபா் கோஹா் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். பின்னா் ஆடியவா்களில் ஷாஹீன் அஃப்ரிதி 4 ரன்கள் சோ்க்க, நசீம் ஷா 3 பவுண்டரிகள் மட்டும் அடித்தாா். இவ்வாறாக முதல் நாள் முடிவில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான்.
நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5, டிம் சௌதி, டிரென்ட் போல்ட் தலா 2, மாட் ஹென்றி 1 விக்கெட் சாய்த்தனா்.