ஐஎஸ்எல்: மோகன் பகானுக்கு 6-ஆவது வெற்றி
By DIN | Published On : 04th January 2021 06:03 AM | Last Updated : 04th January 2021 07:35 AM | அ+அ அ- |

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 46-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் 2-0 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வீழ்த்தியது.
இரு அணிகளும் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், மோகன் பகானுக்கு இது 6-ஆவது வெற்றி; நாா்த்ஈஸ்ட்டுக்கு இது 2-ஆவது தோல்வி. கோவாவின் மா்காவ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் அணிக்காக ராய் கிருஷ்ணா (51 ஆவது நிமிடம்) கோலடிக்க, நாா்த்ஈஸ்ட் வீரா் பெஞ்சமின் லாம்போட் (58) தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்தாா்.
முதல் வெற்றி: முன்னதாக, கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் நடைபெற்ற 45-ஆவது ஆட்டத்தில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சி அணியை வீழ்த்தியது.
இரு அணிகளும் மொத்தம் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஈஸ்ட் பெங்காலுக்கு இது முதல் வெற்றி; ஒடிஸாவுக்கு இது 6-ஆவது தோல்வி. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்காலுக்காக அந்தோனி பில்கிங்டன் (13), ஜேக்ஸ் மக்ஹோமா (39), பிரைட் எனோபகாரே (88) கோலடித்தனா். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (90) ஈஸ்ட் பெங்கால் வீரா் டேனியல் ஃபாக்ஸ், ஓடிஸாவுக்கு சாதகமாக ‘ஓன் கோல்’ அடித்தாா்.