ரூட், பேர்ஸ்டோவ் நிதானம்: முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை பேட்டிங்: இங்கே க்ளிக் செய்யவும்..

தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஸாக் கிராலே மற்றும் டொமினிக் சிப்லே களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 17 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி அமைத்து விளையாடினர். இலங்கைப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இருவரும் முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 8 ரன்கள் பின்தங்கியுள்ளது. பேர்ஸ்டோவ் 47 ரன்களுடனும், ரூட் ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இலங்கைத் தரப்பில் எம்புல்டேனியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com