தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி 14 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. அந்த அணிக்கு குவிண்டன் டி காக் தலைமையேற்றுள்ளாா்.

கராச்சியில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி இன்று 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸில் 100.3 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் என்கிற நிலையில் கடைசி நான்கு விக்கெட்டுகளை 11 ரன்களுக்கு இழந்தது. பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களான நுமான் அலி 5, யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனால் முதல் டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 88 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

பாகிஸ்தான் அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து முதல் டெஸ்டை வெற்றி பெற்றது. கேப்டன் பாபர் அசாம் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசார் அலி 31 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

2 டெஸ்டுகள் கொண்ட தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் பிப்ரவரி 4 அன்று தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com