சயீது முஷ்டாக் அலி: தமிழக அணி சாம்பியன்

​சயீது முஷ்டாக் அலி இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
படம்: டிவிட்டர் | பிசிசிஐ டொமெஸ்டிக்
படம்: டிவிட்டர் | பிசிசிஐ டொமெஸ்டிக்


சயீது முஷ்டாக் அலி இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சயீது முஷ்டாக் அலி இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பரோடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.

121 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் என் ஜெகதீசன் களமிறங்கினர். ஜெகதீசன் 14 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

வெற்றி இலக்கு குறைவு என்பதால் ரன் ரேட் நெருக்கடி இல்லாமல் நிஷாந்த் மற்றும் பாபா அபராஜித் பாட்னர்ஷிப் அமைத்தனர். நிஷாந்த் 35 ரன்கள் சேர்த்த நிலையில் பதான் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கார்த்திக் துரிதமாக விளையாடி 16 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். இதனால் தமிழக அணியின் வெற்றி இலக்கு எளிதானது. கார்த்திக் விக்கெட்டைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாருக் கான் வந்த வேகத்தில் அதிரடி காட்டி 7 பந்துகளில் 18 ரன்கள் குவித்து தமிழக அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபராஜித் 29 ரன்களும், ஷாருக் கான் 18 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம், தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கடந்தாண்டு தமிழக அணி இறுதி ஆட்டம் வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com