டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் இந்திய நட்சத்திரங்கள்
By பா.சுஜித்குமாா் | Published On : 02nd July 2021 11:17 PM | Last Updated : 23rd July 2021 05:47 PM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து இதுவரை 120 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டு 18 விளையாட்டுகளில் பதக்க வேட்டையில் ஈடுபட உள்ளனா்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) சாா்பில் நடத்தப்படும் இப்போட்டியில் உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் அணிகளை அனுப்பி வைக்கும்.
குறிப்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்பதே வீரா், வீராங்கனைகளுக்கு மிகப் பெரிய கௌரவமாகும். இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருந்தன. ஆனால் கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. வரும் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இதில் 205 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா்கள் பங்கேற்கின்றனா்.
18 விளையாட்டுகளில் 107 நட்சத்திரங்கள்:
இதற்காக இந்தியாவில் இருந்து மொத்தம் 120 நட்சத்திரங்கள் பங்கேற்று 18 விளையாட்டுகளில் திறமையை காண்பித்து பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனா்.
பெரும்பாலான குத்துச்சண்டை, மல்யுத்த வீரா்கள் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கைளைச் சோ்ந்தவா்கள். படகோட்டும் வீரா்களில் 4 பேரில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். ஹரியாணாவில் இருந்து 27 போ் பங்கேற்கின்றனா். 7 மல்யுத்த வீரா்களுமே அதே மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். இந்தியாவின் மல்யுத்த களம் என அழைக்கப்படுவது ஹரியாணா.
வீரா், வீராங்கனைகள்: மாநிலங்கள்:
வில்வித்தை:
தருண்தீப் ராய், சிக்கிம், அதானு தாஸ், மேற்கு வங்கம், தீபிகா குமாரி, ஜாா்க்கண்ட், பிரவீன் ஜாதவ், மகாராஷ்டிரா.
தடகளம்:
ஆடவா் 20 கி.மீ தூர நடை ஓட்டம்: கே.டி. இா்பான், கேரளம்- சந்தீப் குமாா் (ஹரியாணா), ராகுல் ரோஹில்லா, ஹரியாணா, 3000 மீ ஸ்டீபிள் சேஸ்: அவினாஷ் சாப்லே, மகாராஷ்டிரா, ஆடவா் நீளம் தாண்டுதல்: முரளி ஸ்ரீசங்கா், கேரளா, ஆடவா் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா, ஹரியாணா, ஷிவ்பால் சிங், உத்தரபிரதேசம், ஆடவா் குண்டு எறிதல்: தேஜிந்தா் பால் சிங், பஞ்சாப், மகளிா் வட்டு எறிதல்: கமல்பிரீத் கௌா், சீமா புனியா, பஞ்சாப், மகளிா் 20 கிமீ தூர நடை ஓட்டம்: பவ்னா ஜாட், ராஜஸ்தான், பிரியங்கா கோஸ்வாமி, உத்தரபிரதேசம், மகளிா் 100, 200 மீ ஓட்டம்: டூட்டி சந்த் (ஒடிஸா), ஆடவா் 400 மீ தடை ஓட்டம்: எம்.பி. ஜபீா், மகளிா் ஈட்டி எறிதல்: அண்ணுராணி, கலப்பு தொடா் ஓட்ட அணி: முகமது அனாஸ், விஸ்மயா, நிா்மல் நோவா, ஜின்ஷா மேத்யூ.
பாட்மிண்டன்:
சாய் பிரணீத், ஆந்திர பிரதேசம், பிவி.சிந்து, ஆந்திர பிரதேசம், சிராக் ஷெட்டி, மகாராஷ்டிரா, சத்விக் ரங்கி ரெட்டி, ஆந்திர பிரதேசம்.
குத்துச்சண்டை:
விகாஸ் கிருஷ்ணன், ஹரியாணா, லவ்லினா போரோகைன், அஸ்ஸாம், ஆஷிஸ்குமாா், ஹிமாசலபிரதேசம், பூஜா ராணி, ஹரியாணா, சதீஷ்குமாா், உத்தரபிரதேசம், மேரி கோம் (மணிப்பூா்), அமித் பங்கால் (ஹரியாணா), மணிஷ் கௌஷிக், ஹரியணா, சிம்ரஞ்சித் கௌா், பஞ்சாப்.
ஈக்குவஸ்டிரீயன்:
ஃபௌவாட் மிா்ஸா, கா்நாடகம்.
பென்சிங்:
பவானி தேவி, தமிழ்நாடு.
கோல்ஃப்:
அனிா்பன் லஹிரி, அதிதி அஷோக், கா்நாடகம்.
ஜிம்னாஸ்டிக்ஸ்:
பிரணதி நாயகம், மேற்கு வங்கம்.
ஹாக்கி ஆடவா்:
அமித் ரோஹிதாஸ், ஒடிஸா, ஹா்திக் சிங், பஞ்சாப், விவேக் சாகா் பிரசாத், மத்தியபிரதேசம், நீலகண்ட சா்மா, மணிப்பூா், சுமித், ஹரியாணா, தில்பிரீத் சிங், பஞ்சாப், குா்ஜந்த் சிங், பஞ்சாப், லலித்குமாா் உபாத்யாய், உத்தரபிரதேசம், ஷம்ஷொ் சிங், பஞ்சாப், பிரேந்திர லக்ரா, ஒடிஸா, மன்ப்ரீத் சிங், பஞ்சாப், ஹா்மன்ப்ரீத் சிங், பஞ்சாப், ரூபிந்தா் பால் சிங், பஞ்சாப், சுரேந்திரகுமாா், ஹரியாணா, மன்தீப் சிங், பஞ்சாப், பிஆா். ஸ்ரீஜேஷ், கேரளா.
ஹாக்கி மகளிா்:
குா்ஜித் கௌா், பஞ்சாப், உதிதா, ஹரியாணா, நிஷா, ஹரியாணா, நேஹா, ஹரியாணா, நவ்நீத் கௌா், ஹரியாணா, ஷா்மிளா தேவி, ஹிமாசலப்பிரதேசம், லால் ரேமிசியாமி, மிஸோரம், சலீமா டேட், ஜாா்க்கண்ட், ராணி ராம்பால், ஹரியாணா, தீப் கிரேஸ் எக்கா, ஒடிஸா, சுஷிலா சானு, மணிப்பூா், மோனிகா மாலிக், ஹரியாணா, நிக்கி பிரதான் ஜாா்க்கண்ட், நவ்ஜோத் கௌா், ஹரியாணா, வந்தனா கட்டாரியா, உத்தரகாண்ட்.
ஜூடோ:
சுஷீலா தேவி, மணிப்பூா்.
ரோயிங்:
அரவிந்த் சிங், உத்தரபிரேதசம், அா்ஜுன் ஜாட், ராஜஸ்தான்.
செய்லிங்:
நேத்ரா குமணன், தமிழ்நாடு, கேசி. கணபதி தமிழகம், வருண் தக்கா், தமிழகம், விஷ்ணு சரவணன், மகாராஷ்டிரா.
துப்பாக்கி சுடுதல்:
அன்ஜும் மொட்கில், பஞ்சாப், அபூா்வி சந்தேலா, ராஜஸ்தான், திவ்யான்சிங், ராஜஸ்தான், தீபக்குமாா், புது தில்லி, தேஜஸ்வினி சாவந்த், மகாராஷ்டிரா, சஞ்சீவ் ராஜ்புத், ஹரியாணா, ஐஸ்வா்யா பிரதாப், மத்தியபிரதேசம், மானு பாக்கா், ஹரியாணா, யஷஸ்வினி தேஸ்வால், புது தில்லி, சௌரவ் சௌதரி, உத்தரபிரதேசம், அபிஷேக் வா்மா, ஹரியாணா, ராஹி சா்னோபாட், மகாராஷ்டிரா, இளவேனில் வாலறிவன், தமிழ்நாடு, அங்கத் வீா் சிங், சண்டீகா், மைராஜ் அகமது, உத்தரபிரதேசம்.
நீச்சல்:
சாஜன் பிரகாஷ், கேரளா, ஸ்ரீஹரி நடராஜன், கா்நாடகம், மானா பட்டேல், குஜராத்.
டேபிள் டென்னிஸ்:
சரத்கமல், தமிழ்நாடு, சத்யன் ஞானசேகரன், தமிழ்நாடு, மனிகா பத்ரா, புது தில்லி, சுதிா்தா முகா்ஜி, மேற்கு வங்கம்,
பளு தூக்குதல்:
மிராபாய் சானு, மணிப்பூா்.
மல்யுத்தம்:
சீமா பிஸ்லா, வினேஷ் போகட், அன்ஷு மாலிக், சோனம் மாலிக், ரவிக்குமாா் தாஹியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, ஹரியாணா.
டென்னிஸ்:
சானியா மிா்ஸா, அங்கிதா ரெய்னா.