டோக்கியோ ஒலிம்பிக்: தகுதி பெற்றாா்: இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல்
By DIN | Published On : 02nd July 2021 11:25 PM | Last Updated : 03rd July 2021 07:49 AM | அ+அ அ- |

இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
ஒவ்வொரு நாட்டில் இருந்து பல்கலைக்கழக ஒதுக்கீட்டில் இருந்து தலா ஒரு வீரா், வீராங்கனை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும். நீச்சல் மகளிா் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் மானா பட்டேல் தகுதி பெற்றாா்.
21 வயதே ஆன மானா பட்டேல் கடந்த 2019 நீச்சல் சீசனில் கணுக்கால் காயத்தில் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தாா். இந்நிலையில் ஒலிம்பிக்கை குறி வைத்து, அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டாா். கடந்த ஏப்ரலில் நடந்த உஸ்பெகிஸ்தான் ஓபன் நீச்சல் போட்டியில் 100 மீ. பேக் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கம் வென்றாா். பெல்கிரேட் கோப்பை போட்டியில் புதிய தேசிய சாதனையையும் நிகழ்த்தினாா்.
ஒலிம்பிக் தகுதி குறித்து மானா பட்டேல் கூறியதாவது:
காயத்தால் நீச்சல் பயிற்சி பெற முடியாமல் இருந்தது வேதனையாக இருந்தது. தற்போது ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளேன். இது அனுபவமாகத் தான் இருக்கும். வரும் 2023-இல் காமன்வெல்த் போட்டி, ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே இலக்காகும் என்றாா்.
சானியா-அங்கிதா பங்கேற்பு:
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா-அங்கிதா ரெய்னா இணை பங்கேற்கிறது. உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சானியா நேரடித் தகுதி பெற்றாா். தற்போது அவா் பங்கேற்கும் 4-ஆவது ஒலிம்பிக் இதுவாகும். அங்கிதா ரெய்னாவுக்கு இது முதல் போட்டியாகும்.
ஆடவா் இரட்டையா் பிரிவில் ரோஹன் போபண்ணா-தி விஜ் சரண் பங்கேற்கவில்லை.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G