அனுபவமில்லா இங்கிலாந்து அணியிடம் மோசமாகத் தோற்ற பாகிஸ்தான் (ஹைலைட்ஸ் விடியோ)

ஒன்பது வீரர்கள் ஐந்து ஒருநாள் ஆட்டங்களுக்குக் குறைவாக ஆடியவர்கள்.
அனுபவமில்லா இங்கிலாந்து அணியிடம் மோசமாகத் தோற்ற பாகிஸ்தான் (ஹைலைட்ஸ் விடியோ)

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அனுபவமில்லா இங்கிலாந்து அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது பாகிஸ்தான் அணி.

இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்டோக்ஸ் தலைமையிலான அனுபவமில்லா இங்கிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒன்பது புதிய வீரர்கள் இடம்பெற்றார்கள்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் கார்டிஃபில் நடைபெற்றது. நான்கு நாள்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக விளையாடிய 11 பேரும் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. கரோனாவால் பாதிக்கப்படாத இங்கிலாந்து வீரர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து அணியினரின் ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் அனுபவம் - 124 ஆட்டங்கள். இதில் ஸ்டோக்ஸ் மட்டுமே 99 ஆட்டங்கள். ஒன்பது வீரர்கள் ஐந்து ஒருநாள் ஆட்டங்களுக்குக் குறைவாக ஆடியவர்கள். அதனால் ஐந்து புதிய வீரர்களுடன் அனுபவமில்லா அணியினருடன் களமிறங்கினார் ஸ்டோக்ஸ்.

சகிப் முகமதுவின் அபார பந்துவீச்சால் 35.2 ஓவர்களில் 141 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான் அணி. ஃபகார் ஸமான் 47 ரன்கள் எடுத்தார். முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

21.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து பெரிய வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. டேவிட் மலான் 68 ரன்களும் கிராவ்லி 58 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் முதல் தேர்வு வீரர்கள் இல்லாமலேயே இங்கிலாந்து அணியால் சிறப்பாக விளையாட முடியும் என்பது அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com