முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே சாதனைகளைப் படைத்த இளம் வீரர் இஷான் கிஷன்
By DIN | Published On : 19th July 2021 10:39 AM | Last Updated : 19th July 2021 10:39 AM | அ+அ அ- |

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 262/9 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 263/3 ரன்களை எடுத்து வென்றது. கேப்டன் தவான் ஆட்டமிழக்காமல் 86 ரன்களை எடுத்தார். பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசினார். 33 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடந்த அறிமுக வீரர் இஷான் கிஷன், 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதன்மூலம் சில சாதனைகளை 23 வயது இஷான் கிஷன் நிகழ்த்தியுள்ளார்.
* முதல் ஒருநாள், டி20 ஆட்டங்களில் அரை சதங்களை எடுத்த 2-வது வீரர்.
* 33 பந்துகளில் அரை சதம் எடுத்து அறிமுக ஆட்டத்திலேயே விரைவாக அரை சதம் எடுத்த 2-வது வீரர். இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் 26 பந்துகளில் அரை சதம் எடுத்த கிருனால் பாண்டியாவின் சாதனை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
* 59 ரன்களுடன் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்.
* 2001-க்குப் பிறகு அறிமுக ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீரர்.