டிஎன்பில்: அஸ்வின் வெளியிட்ட விடியோ

டிஎன்பிஎல் போட்டி உருவான விதம், அந்தப் போட்டியில் வீரர்களை எப்படித் தேர்வு செய்வார்கள்...
டிஎன்பில்: அஸ்வின் வெளியிட்ட விடியோ

டிஎன்பில் டி20 போட்டி விடியோ வெளியிட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

சென்னையில் தொடங்கிய தமிழ்நாடு ப்ரீமியா் கிரிக்கெட் லீக் போட்டி (டிஎன்பிஎல்)யின் கோவை லைக்கா கிங்ஸ்-சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் அணிகள் இடையிலான முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-வது சீசன் டி 20 கிரிக்கெட் ஆட்டங்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த வருடம் போட்டி நடைபெறவில்லை. இந்த வருடம் அனைத்து ஆட்டங்களும் சென்னையில் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 15 அன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. 

இளைஞா்கள் மத்தியில் கிரிக்கெட் ஆா்வத்தை மேலும் தூண்டும் வகையிலும், மாவட்டங்களில் கிரிக்கெட் ஆட்டம் வளரவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் டிஎன்பிஎல் எனப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளார். தனக்கென்று தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ள அஸ்வின், டிஎன்பிஎல் போட்டி பற்றி தனியாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.

டிஎன்பிஎல் போட்டி உருவான விதம், அந்தப் போட்டியில் வீரர்களை எப்படித் தேர்வு செய்வார்கள், இந்த வருடப் போட்டியில் சிறப்பாக விளையாடவுள்ள வீரர்கள் என டிஎன்பிஎல் போட்டி பற்றிய தனது எல்லாவிதமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். தனது விடியோவில் பல வீரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுடைய திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்தில் கவுன்டி மற்றும் பயிற்சி ஆட்டங்களில் மும்முரமாக இருந்தாலும் இதற்கென நேரம் ஒதுக்கி டிஎன்பிஎல் போட்டியின் அணிகள் மற்றும் அதில் விளையாடும் வீரர்களைப் பற்றி விடியோ வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் அஸ்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com