லார்ட்ஸ் டெஸ்டில் அறிமுகமான இங்கிலாந்து வீரருக்கு இடைக்காலத் தடை

எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்களுக்காக இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சனுக்கு...
லார்ட்ஸ் டெஸ்டில் அறிமுகமான இங்கிலாந்து வீரருக்கு இடைக்காலத் தடை

எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்களுக்காக இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சனுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இங்கிலாந்து சார்பாக 27 வயது ஆலி ராபின்சன் அறிமுகமானார். இந்த டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். 

2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இனவெறி உணர்வுகளுடன் சர்ச்சைக்குரிய ட்வீட்களை ஆலி ராபின்சன் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற ஆலி ராபின்சனுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி). 2-வது டெஸ்டில் ஆலி ராபின்சன் இடம்பெற மாட்டார். உடனடியாக அவர் இங்கிலாந்து அணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என இசிபி தெரிவித்துள்ளது. 

தன்னுடைய ட்வீட்களுக்கு ராபின்சனும் வருத்தம் தெரிவித்துள்ளார். நான் இனவெறியன் அல்லன். பாலின அடிப்படையில் வேறுபாடு பார்ப்பவனும் அல்லன். என்னுடைய நடவடிக்கைகளுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட ட்வீட்களை வெளியிட்டதற்காக வெட்கப்படுகிறேன். பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுள்ளேன். அப்போது நான் என்ன மனநிலையில் இருந்திருந்தாலும் என்னுடைய நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கிடையாது. அதன்பிறகு நான் பக்குவம் அடைந்துள்ளேன். என்னுடைய ட்வீட்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளார் ஆலி ராபிசன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com