2-வது எல்பிஎல் டி20 போட்டி: ஜூலை 30-ல் தொடக்கம்
By DIN | Published On : 09th June 2021 12:01 PM | Last Updated : 09th June 2021 12:01 PM | அ+அ அ- |

இலங்கை பிரீமியர் லீக் (எல்பிஎல்) டி20 போட்டி ஜூலை 30 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற எல்பிஎல் போட்டியில் இர்ஃபான் பதான், முனவ் படேல், சுதீப் தியாகி போன்ற இந்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்றார்கள். அப்போட்டியில் ஐந்து அணிகள் பங்கேற்றன.
இந்த வருட எல்பிஎல் போட்டி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது. ஜூலை 30-ல் தொடங்கும் எல்பிஎல் போட்டி ஆகஸ்ட் 22-ல் நிறைவுபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கையில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G