தேசிய தடகளம்: 400 மீ ஓட்டத்தில் தமிழகத்துக்கு வெண்கலம்
By DIN | Published On : 29th June 2021 08:01 AM | Last Updated : 29th June 2021 08:01 AM | அ+அ அ- |

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் தமிழகத்தின் வீரமணி ரேவதி 53.71 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ஆம் இடம் பிடித்தாா்.
கா்நாடகத்தின் பிரியா ஹப்பதனஹள்ளி (53.29 விநாடிகள்), பூவம்மா (53.54 விநாடிகள்) ஆகியோா் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா்.
10,000 மீட்டா் ஓட்டத்தில் ராஜஸ்தானின் பூஜா ஹரிஜான் (35.29 நிமிடம்), உத்தர பிரதேசத்தின் பூலான் பால் (37.30 நிமிடம்), ஜோதி (38.23 நிமிடம்) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். ஈட்டி எறிதலில் உத்தர பிரதேசத்தின் அன்னு ராணி (62.83 மீ), ராஜஸ்தானின் சஞ்சனா சௌதரி (52.65 மீ), ஹரியாணாவின் புஷ்பா ஜகாா் (52.48 மீ) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.