யூரோ கோப்பை: உலக சாம்பியன் பிரான்ஸ் வெளியேற்றம்

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களை...
வெற்றியைக் கொண்டாடும் ஸ்விட்சர்லாந்து வீரர்கள்
வெற்றியைக் கொண்டாடும் ஸ்விட்சர்லாந்து வீரர்கள்

யூரோ கோப்பை போட்டியில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி ஸ்விட்சர்லாந்திடம் தோற்று வெளியேறியுள்ளது. 

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் யூரோ 2020 கோப்பை கால்பந்து போட்டிகள் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. யூரோ கோப்பை லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளன.

புகாரெஸ்டில் பிரான்ஸ் - ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்திருந்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என உலக சாம்பியன் ஃபிரான்ஸை ஸ்விட்சர்லாந்து தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கூடுதல் நேரத்துக்குச் சென்ற 3-வது ஆட்டம் இது. எனினும் பெனால்டி வரை போனது இதுவே முதல்முறை. 

குரோஷியாவை 5-3 எனத் தோற்கடித்த ஸ்பெயினை ஜூலை 2 அன்று காலிறுதிச்சுற்றில் எதிர்கொள்கிறது ஸ்விட்சர்லாந்து. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com