இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: பிராத்வெயிட் தலைமையிலான மே.இ. தீவுகள் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோல்டர்
ஹோல்டர்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கிரைக் பிராத்வெயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-0 என வென்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே.இ. தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டனான ஜேசன் ஹோல்டர், வங்கதேசத்துக்குச் செல்லவில்லை. இதனால் பிராத்வெயிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் தலைமை தாங்கிய 5 டெஸ்டுகளிலும் மே.இ. தீவுகள் அணி தோற்றிருந்தது. எனினும் அணியை நன்கு வழிநடத்தி டெஸ்ட் தொடரை வென்று காண்பித்தார் பிராத்வெயிட்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கேப்டனாக பிராத்வெயிட் நியமிக்கப்படுவதாக மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், மார்ச் 21 முதல் தொடங்குகிறது. 

28 வயது பிராத்வெயிட், 66 டெஸ்டுகளில் விளையாடி 20 சதங்களுடன் 3876 ரன்கள் எடுத்துள்ளார். 29 வயது ஹோல்டர், மே.இ. தீவுகள் அணிக்காக 37 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கி 11 வெற்றிகளையும் 21 தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளார். ஒரு டெஸ்ட் வீரராக ஹோல்டர் இன்னும் பல வருடங்கள் பங்களிக்க வேண்டும் என மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஜிம்மி ஆடம்ஸ் கூறியுள்ளார். 

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஹோல்டர், டேரன் பிராவோ இடம்பெற்றுள்ளார்கள்.

மே.இ. தீவுகள் அணி

கிரைக் பிராத்வெயிட், ஜெர்மைன் பிளாக்வுட், பொன்னர், டேரன் பிராவோ, ஜான் கேம்பல், ரகீம் கார்ன்வெல், ஜோசுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), ஷனான் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கைல் மேயர்ஸ், கெமர் ரோச், ஜோமெல் வாரிகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com