டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர்?

கிரிக்கெட்டினால் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்படும். நான் இதை முன்பே கூறியுள்ளேன்...
டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர்?

டி20 தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதப் போகிறதா?

இதுதான் நேற்று முதல் கிரிக்கெட் ரசிகர்களிடம் உள்ள கேள்வி.

இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த பிறகு, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் ஊடகங்கள் இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன. இதனை பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை உறுதி செய்யவில்லை. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தச் செய்தி ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர் பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானதாகும். அரசியலிலுடன் விளையாட்டை இணைக்கக் கூடாது. கிரிக்கெட்டினால் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்படும். நான் இதை முன்பே கூறியுள்ளேன், பாகிஸ்தானுக்கு வர இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் விரும்புவார்கள். இரு தரப்புக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நிலைமை மாறாது என்றார். 

பாகிஸ்தானின் ஜியோ டிவிக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஈசான் மணி, இந்தியா - பாகிஸ்தான் தொடருக்காக யாரும் பேசவில்லை. பிசிசிஐயுடன் இதுகுறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com