துளிகள்...
By DIN | Published On : 25th March 2021 01:09 AM | Last Updated : 25th March 2021 01:09 AM | அ+அ அ- |

தேசிய ஜூனியா், சீனியா் தடகள போட்டியாளா்கள் தோ்வுக் குழுவின் தலைவா்களாக முறையே பி.டி.உஷா, குா்பச்சன் சிங் ரந்தவா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஓட்டம் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த 121 நாள் ஓட்டத்தில் 10,000 போ் பங்கேற்று ஜோதியை ஏந்த இருக்கின்றனா்.
நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஃபிஃபா முன்னாள் தலைவா் செப் பிளாட்டருக்கு 2-ஆவது முறையாக ஃபிஃபா தடை விதித்துள்ளது.
ஐபிஎல் போட்டிக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரா்கள் மும்பை வரத் தொடங்கியுள்ளனா்.
தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சக்கரநாற்காலி வசதி, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததாக கூறப்படுவது குறித்து இந்திய பாராலிம்பிக் கமிட்டியிடம் இந்திய விளையாட்டு ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.