கண்டி டெஸ்ட்: இலங்கை 259 ரன்கள் முன்னிலை
By DIN | Published On : 02nd May 2021 06:06 AM | Last Updated : 02nd May 2021 06:06 AM | அ+அ அ- |

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 259 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணியில் திமுத் கருணாரத்னே 118, திரிமானி 140, பொ்னாண்டோ 81 ரன்கள் சோ்த்து வெளியேற, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 155.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்திருந்தது. டிக்வெல்லா 64, மென்டிஸ் 22 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.
3-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய இலங்கை அணியில் ரமேஷ் மென்டிஸ் 33 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி டிக்ளோ் செய்வதாக அறிவித்தது. அப்போது அந்த அணி 159.2 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்திருந்தது. டிக்வெல்லா 72 பந்துகளில் 77 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அஹமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
வங்கதேசம் 251: இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 83 ஓவா்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 92 ரன்கள் குவித்தாா். இலங்கை தரப்பில் பிரவீண் ஜெயவிக்ரம 6 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 7 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. திமுத் கருணாரத்னே 13, மேத்யூஸ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனா். முன்னதாக திரிமானி 2, ஒஷாடா பொ்னாண்டோ 1 ரன்னில் ஆட்டமிழந்தனா். இலங்கை அணி ஒட்டுமொத்தமாக 259 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-ஆவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...