சையத் முஷ்டாக் அலி: தமிழக அணிக்கு முதல் தோல்வி!
By DIN | Published On : 08th November 2021 04:12 PM | Last Updated : 08th November 2021 04:12 PM | அ+அ அ- |

கோவாவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது தமிழக அணி.
சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியின் லீக் சுற்றில் இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது தமிழக அணி. இதனால் கோவாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நடராஜன், பாபா அபரஜித், சந்தீப் வாரியர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. சஞ்சய் யாதவ் 38 ரன்களும் ஷாருக் கான் 26 ரன்களும் எடுத்தார்கள். ஸ்ரீகாந்த் வாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்த கோவா அணி, 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி 2021 போட்டியில் தமிழக அணி எதிர்கொண்டுள்ள முதல் தோல்வி இது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் தமிழக அணி பஞ்சாப்புடன் மோதுகிறது.