சையத் முஷ்டாக் அலி கோப்பை: நாக்-அவுட் ஆட்டங்களின் அட்டவணை வெளியீடு
By DIN | Published On : 13th November 2021 11:02 AM | Last Updated : 13th November 2021 11:02 AM | அ+அ அ- |

தமிழக அணி வீரர் சாய் கிஷோர் (கோப்புப் படம்)
சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டிக்கான நாக்-அவுட் அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஹைதராபாத் அணிகள் காலிறுதிக்கும் மஹாராஷ்டிரா, விதர்பா, ஹிமாசலப் பிரதேசம், கேரளா, கர்நாடகம், செளராஷ்டிரம் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளன.
நவம்பர் 16 அன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களும் நவம்பர் 18 அன்று காலிறுதி ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. இந்நிலையில் நாக்-அவுட் ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 16 - காலிறுதிக்கு முந்தைய சுற்று
மஹாராஷ்டிரா vs விதர்பா
ஹிமாசலப் பிரதேசம் vs கேரளா
கர்நாடகம் vs செளராஷ்டிரம்
நவம்பர் 18 - காலிறுதிச் சுற்று
ராஜஸ்தான் vs -
தமிழ்நாடு vs -
பெங்கால் vs -
குஜராத் vs ஹைதராபாத்
காலிறுதிக்கு முந்தைய சுற்று முடிவடைந்த பிறகு காலிறுதியில் ராஜஸ்தான், தமிழ்நாடு, பெங்கால் அணிகளுடன் மோதும் அணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...