விளையாட்டு செய்தி துளிகள்

* முழுமையாக பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக இதர ஃபாா்மட்டுகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலக வாய்ப்புள்ளதாக முன்னாள் பயிற்சியாளா் ரவி சாஸ்திரி கூறியுள்ளாா்.

* ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இருதரப்பு டி20 தொடரில் வரும் மாா்ச் 17-ஆம் தேதி முதல் நியூஸிலாந்தில் மோதுகின்றன.

* ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸில் இங்கிலாந்தின் ஆன்டி முா்ரேவை 6-2, 3-6, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்காவின் டாமி பால், அதில் சக நாட்டவரான ஃபிரான்சஸ் டியாஃபோவை சந்திக்கிறாா்.

* உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்றில் ஈகுவடாா் - வெனிசூலாவையும், சிலி - பராகுவேயையும், பிரேஸில் - கொம்பியாவையும், பெரு - பொலிவியாவையும் வீழ்த்தின. ஆப்பிரிக்க பிரிவில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வேயையும், அல்ஜீரியா - ஜிபூட்டியையும் வென்றன. ஐரோப்பிய பிரிவில் ஜொ்மனி - லெய்டென்ஸ்டினையும், குரோஷியா - மால்டாவையும், ஸ்பெயின் - கிரீஸையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com