நாளை தொடங்கும் டி20 தொடர்: நியூசி. அணி அறிவிப்பு, கேப்டன் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் டி20 தொடர்: நியூசி. அணி அறிவிப்பு, கேப்டன் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.

டி20, டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று துபையில் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய நியூசிலாந்து அணி, அடுத்த 3-வது நாளில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக டி20 தொடரிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இதனால் முதல் டி20 ஆட்டத்தில் செளதி தலைமையில் நியூசிலாந்து டி20 அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி

டிம் செளதி (கேப்டன்), டாட் ஆஸ்லே, டிரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், லாகி ஃபெர்குசன், மார்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஆடம் மில்ன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சைஃபர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com