
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
2027 ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அப்போட்டியில் தரவரிசையில் அடிப்படையில் 10 அணிகள் நேரடியாகப் பங்குபெறும். உலக அளவிலான தகுதிச்சுற்றின் அடிப்படையில் மேலும் 4 அணிகள் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும். இதன்மூலம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின் முடிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்காகக் கடைப்பிடிக்கப்படும் ஒருநாள் சூப்பர் லீக் நடைமுறை முடிவுக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.