உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் கலப்பு இரட்ரைடயர், மகளிர் இரட்ரைடயர் பிரிவில் களம் கண்டிருந்த இந்திய ஜோடிகள் காலிறுதியில் தோற்று வெளியேறின. இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
கலப்பு இரட்டையர் பிரிவில் ஜி.சத்யன்/மனிகா பத்ரா இணை தனது காலிறுதியில் 5-11, 2-11, 11-7, 9-11 என்ற செட்களில் ஜப்பானின் ஹரிமோடோ டோமோ காஸூ/ஹயாடா ஹினா ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.
மறுபுறம், மகளிர் இரட்ரைடயர் பிரிவு காலிறுதியில் மனிகா பத்ரா/அர்ச்சனா காமத் இணை 1-11, 6-11, 8-11 என்ற செட்களில் லக்ஸம்பர்க்கின் சாரா டி நூட்/ஜியா லியான்னி ஜோடியிடம் வீழ்ந்தது.
இப்போட்டியில் அரைரயிறுதிக்கு முன்னேறி அதில் தோல்வி காண்போருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வரைகயில் இந்த இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் கிடைத்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.