அதிரடியாக விளையாடிய இந்திய மகளிர் அணி: மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 ஆட்டம்

4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோருக்குத் திட்டமிட்டிருந்தது...
ரோட்ரிக்ஸ் (கோப்புப் படம்)
ரோட்ரிக்ஸ் (கோப்புப் படம்)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கிறது.

டி20 தொடர் கோல்ட்கோஸ்டில் இன்று முதல் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸி. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் ரேணுகா சிங், யாஷ்திகா பாட்டியா என இருவர் டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். அதேபோல ஆஸி. அணியிலும் தஹ்லியா மெக்ராத், டார்லிங்டன் என இருவர் அறிமுகமானார்கள்.

இந்திய அணி வீராங்கனைகள் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். 3 சிக்ஸர்கள் அடித்த ஷஃபாலி 18 ரன்களிலும் 1 சிக்ஸர் 2 பவுண்டரி அடித்த மந்தனா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். ஜெமிமா ரோட்ரிக்ஸ் நன்கு விளையாடி 36 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் ரிச்சா கோஷ் 17 ரன்களும் எடுத்த  நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோருக்குத் திட்டமிட்டிருந்தது. இந்த ஆட்டத்தில் 1000 டி20 ரன்களைப் பூர்த்தி செய்தார் ரோட்ரிக்ஸ். இளம் வயதில் (21) இந்த இலக்கை எட்டிய வீராங்கனை என்கிற பெருமையை அவர் பெற்றார். 

பிறகு மழை காரணமாக இந்தியாவின் இன்னிங்ஸ் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆஸி. அணிக்கு 5 ஓவர்களில் 63 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. இதனால் முதல் டி20 ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2-வது டி20 ஆட்டம் அக்டோபர் 9 அன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com