
பாண்டியாவின் உடற்தகுதி காரணமாக இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் ஷர்துல் தாக்குர் தேர்வாகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் ஏற்கெனவே இருந்த அக்ஷர் படேல், மாற்று வீரர்களில் ஒருவராக இணைந்துள்ளார். மேலும் வலைப்பயிற்சி வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஹார்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசாததால் அவருடைய உடற்தகுதி குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. பாண்டியாவில் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அணியின் மற்றொரு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அணியில் ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் அக்ஷர் படேல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.