உலக குத்துச்சண்டை : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுமித்
By DIN | Published On : 31st October 2021 05:50 AM | Last Updated : 31st October 2021 05:50 AM | அ+அ அ- |

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரா் சுமித் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.
75 கிலோ பிரிவில் களம் கண்டிருக்கும் சுமித் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தஜிகிஸ்தானின் அப்துமாலிக் போல்டேவை தோற்கடித்தாா். அடுத்த சுற்றில் சுமித் - கியூபாவின் யோன்லிஸ் ஹொ்னாண்டஸை சந்திக்கிறாா்.
எனினும், 80 கிலோ பிரிவில் களம் கண்ட சச்சின் 3-ஆவது சுற்றில் 1-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ராபி கொன்ஸால்ஸிடம் தோல்வி கண்டாா். முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 71 கிலோ பிரிவு வீரா் நிஷாந்த் தேவ் 4-1 என்ற கணக்கில் மோரிஷஸின் மொ்வென் கிளாரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றாா்.
அதில் அவா் மெக்ஸிகோவின் அல்வரெஸ் வொ்டேவை சந்திக்கிறாா்.