பாராலிம்பிக்ஸ் வில்வித்தை: வெண்கலம் வென்றார் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்

பாராலிம்பிக்ஸ் வில்வித்தை: வெண்கலம் வென்றார் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டி 2020 டோக்கியோவில் இன்று தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டி நடத்தப்படும். இந்தியாவில் இருந்து 54 போ் கொண்ட அணி 9 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. 

ஆடவர் வில்வித்தை ஒற்றையர் ரிகர்வ் ஓபன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கொரியாவின் கிம் மின் சு-வை எதிர்கொண்டார் இந்தியாவின் ஹர்விந்தர் சிங். இதில் கடைசிக்கட்டத்தில் 10 புள்ளிகளை எடுத்து கொரிய வீரைத் தோற்கடித்தார். இதையடுத்து ஹர்விந்தர் சிங்குக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

பாராலிம்பிக்ஸில் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம் கிடைத்துள்ளது. 2018 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங், பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். 

இதன்மூலம் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்திய அணி இதற்கு முன்பு மொத்தமாகவே 12 பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. டோக்கியோவில் அந்த இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ளார்கள் இந்திய வீரர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com