வண்ணமயமாக நிறைவு பெற்றது டோக்கியோ பாராலிம்பிக்

12 நாளாக நடந்து வந்த டோக்கியோ பாராலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது.  
வண்ணமயமாக நிறைவு பெற்றது டோக்கியோ பாராலிம்பிக்

12 நாளாக நடந்து வந்த டோக்கியோ பாராலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. 
நிறைவு விழாவில் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. போட்டியில் பங்கேற்ற நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
இந்தியா சார்பில் வீராங்கனை அவனி லெஹரா தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது. 
பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 24ஆவது இடத்தில் உள்ளது. 

163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு பாராலிம்பிக்கில் தங்களது திறமையை வெளிக்காட்டினர். அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com