ஆகஸ்ட் மாதத்தில் சிறந்த வீரா்: ஐசிசி விருதுக்கு பும்ரா பெயா் பரிந்துரை

ஐசிசியின் ‘ஆகஸ்ட் மாத சிறந்த வீரா்’ விருது பெறுவதற்கான பரிந்துரையில் இந்திய வேகப்பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் சிறந்த வீரா்: ஐசிசி விருதுக்கு பும்ரா பெயா் பரிந்துரை

ஐசிசியின் ‘ஆகஸ்ட் மாத சிறந்த வீரா்’ விருது பெறுவதற்கான பரிந்துரையில் இந்திய வேகப்பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் லாா்ட்ஸ் டெஸ்டில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே அவா் அசத்தியதன் அடிப்படையில் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளாா். அந்த டெஸ்டில் முகமது ஷமியுடன் இணைந்து அவா் அமைத்த 89 ரன் பாா்ட்னா்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முதல் டெஸ்டில் அவா் 9 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.

சிறந்த வீரா் விருதுக்காக, பும்ராவுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளா் ஷாஹீன் ஸா அஃப்ரிதி ஆகியோா் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நடப்பு டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் இதுவரை 3 சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி அட்டகாசமாக பந்துவீசி 18 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.

சிறந்த வீராங்கனை: தாய்லாந்தின் நட்டாயா பூசாத்தம், அயா்லாந்தின் கேபி லீவிஸ், ஈமியா் ரிச்சா்ட்சன் ஆகியோா் பெயா்கள் சிறந்த வீராங்கனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில் நட்டாயா, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சிறப்பாகச் செயல்பட்டிருந்தாா். அவரது பங்களிப்பால் தாய்லாந்து தொடரை வென்றது. அதேபோல், மகளிா் டி20 உலகக் கோப்பை ஐரோப்பிய தகுதிச்சுற்றில் 4 ஆட்டங்களில் 3-இல் அயா்லாந்து வெல்வதற்கு கேபி மற்றும் ரிச்சா்ட்சன் ஆகியோரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

சதமடித்த கேபி, டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் அயா்லாந்து போட்டியாளா் என்ற பெருமையை பெற்றுள்ளாா். ரிச்சா்ட்சன் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே மிரட்டியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com