இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: பிசிசிஐ

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: பிசிசிஐ

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

பிரபல பேட்ஸ்மேனான விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார். எனினும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை. இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாகவும், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை பிசிசிஐ மறுத்துள்ளது. பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இவையெல்லாம் அபத்தமானவை. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 அணிகளுக்குத் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி பிசிசிஐ விவாதிக்கவில்லை. எல்லாவிதமான போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக நீடிப்பார் என்று விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com