மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 127 இடங்கள் முன்னேறிய எம்மா ரடுகானு
By DIN | Published On : 14th September 2021 12:39 PM | Last Updated : 14th September 2021 12:39 PM | அ+அ அ- |

யு.எஸ். ஓபன் பட்டம் வென்ற வீராங்கனை எம்மா ரடுகானு தரவரிசையில் 23-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
யு.எஸ். ஓபன் போட்டியில் இரு பதின்ம வயது வீராங்கனைகள் அரையிறுதி ஆட்டங்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்கள். தரவரிசையில் 73-ம் இடத்தில் இருந்த கனடாவைச் சேர்ந்த 19 வயது லேலாவும் 150-வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் 18 வயது எம்மா ரடுகானுவும் இறுதிச்சுற்றில் மோதியதில் எம்மா ரடுகானு யு.எஸ். ஓபன் மகளிர் சாம்பியன் ஆனார்.
இதையடுத்து இன்று வெளியிடப்பட்டுள்ள டபிள்யூடிஏ தரவரிசையில் 150-வது இடத்தில் இருந்த எம்மா ரடுகானு, 127 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். யு.எஸ். ஓபன் போட்டியில் 2-ம் இடம் பெற்ற லேலா, 45 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இரு இடங்களில் ஆஷ் பார்டியும் அரினா சபலேன்காவும் நீடிக்கிறார்கள்.