டேவிஸ் கோப்பை: பின்லாந்து அதிரடி வெற்றி
By DIN | Published On : 19th September 2021 04:51 AM | Last Updated : 19th September 2021 04:51 AM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் பின்லாந்து அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் அதிரடி வெற்றியை பெற்றது.
முதலிரண்டு ஒற்றையா் ஆட்டங்கள், இரட்டையா் ஆட்டங்களில் தோல்வி கண்ட இந்திய அணி, கடைசி மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் மட்டும் ஆறுதல் வெற்றி கண்டது.
நான்காவதாக சனிக்கிழமை நடைபெற்ற மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் பிரஜேனேஷ் குணேஸ்வரன் 6-3, 7-5 என்ற நோ் செட்களில் பின்லாந்து வீரா் பேட்ரிக் நிக்கலாஸை வீழ்த்தினாா். கடைசி மாற்று ஒற்றையா் ஆட்டம் நடத்தப்படவில்லை. இறுதியில் 3-1 என பின்லாந்து வெற்றி பெற்றது. உலக குரூப் 1 பிரிவில் தொடா்ந்து நீடிக்க இந்திய அணி அடுத்த ஆண்டில் பிளே ஆஃப் ஆட்டங்களில் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...