வரலாற்றில் இன்று: யுவ்ராஜ் சிங் விளாசிய 6 சிக்ஸர்கள்! (விடியோ)

14 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் முதல் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவ்ராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார்.
வரலாற்றில் இன்று: யுவ்ராஜ் சிங் விளாசிய 6 சிக்ஸர்கள்! (விடியோ)


14 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் முதல் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவ்ராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட 2007-இல் இதேநாளில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அப்போதைய இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய யுவ்ராஜ் சிங் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.

18-வது ஓவரின் முடிவில் ஆண்ட்ரூ பிளின்டாப்புக்கும் யுவ்ராஜ் சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஸ்டுவர்ட் பிராட் 19-வது ஓவரை வீசினார்.

பிராட் வீசிய அந்த ஓவரின் அனைத்துப் பந்துகளும் மைதானத்தின் நாலாப்புறமும் சிக்ஸர்களாகப் பறந்தன. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டிலும், டி20 உலகக் கோப்பையிலும் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட முதல் வீரர் என்ற சாதனையை யுவ்ராஜ் சிங் படைத்தார்.

யுவ்ராஜ் சிங்கின் இந்த அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. அதுவே இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டது.

2007 டி20 உலகக் கோப்பை வெல்வதற்கு யுவ்ராஜ் சிங் முக்கியக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com