ஆப்கன் கிரிக்கெட் வாரியத் தலைவர் பணி நீக்கம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து பல அத்துமீறல்களும் , சகிப்புத்தன்மையற்ற செயலும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை(செப்-20) அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத் தலைவர
புதிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நசிம் கான்(இடது)
புதிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நசிம் கான்(இடது)

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து பல அத்துமீறல்களும் , சகிப்புத்தன்மையற்ற செயலும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை(செப்-20) அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத் தலைவரைப் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது தலிபான் அரசு.

ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்திருந்தார்கள். ஆனால் ஆண்களுடன் சேர்ந்து படிப்பதிலிருந்து பணிபுரிவது வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் பெண்கள் அமர்ந்திருப்பார்கள் என்பதற்காக அப்போட்டிகளை ஆப்கனில் ஒளிபரப்பத் தடை விதித்தனர்.

தற்போது அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத் தலைவரான ஹமித் ஷின்வாரியை நீக்கிவிட்டு நசிம் கான் என்பவரைத் தலைவராக நியமனம் செய்திருக்கிறார்கள்.

முன்னதாக ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com