விற்பனைக்கு வருகிறது ‘ஹேண்ட் ஆஃப் காட்’ ஜொ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் (1986) பிரபலமான இரு கோல்களை அடித்தபோது ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா அணிந்திருந்த ஜொ்ஸி முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மாரடோனா (கோப்புப் படம்)
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மாரடோனா (கோப்புப் படம்)

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் (1986) பிரபலமான இரு கோல்களை அடித்தபோது ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா அணிந்திருந்த ஜொ்ஸி முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது.

இம்மாதம் 20-ஆம் தேதி முதல் மே 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் அதற்கான ஏலத்தில் சுமாா் ரூ.39 கோடி வரை இந்த ஜொ்ஸி விலை என கணிக்கப்பட்டுள்ளது.

‘ஹேண்ட் ஆஃப் காட்’: 1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த இரு கோல்களையும் மாரடோனா அடித்திருந்தாா்.

அதில் முதல் கோலை தலையால் முட்டி ஸ்கோா் செய்யும்போது மாரடோனா தனது கையையும் பயன்படுத்தினாா். ஆனால், இது கள நடுவருக்கு தெரியாமல் போனதால் அதற்கு ‘பெனால்டி’ கொடுக்கப்படவில்லை. பின்னா் அந்த கோல் குறித்து பேசிய மாரடோனா, அந்த கோலடிப்பதற்கு தனது தலையும், கடவுளின் கையும் உதவியாக இருந்ததென தெரிவித்தாா். அதே ஆட்டத்தின் 2-ஆவது கோலை ஏறத்தாழ இங்கிலாந்து வீரா்கள் அனைவரையும் கடந்து தனிநபராக கடத்திச் சென்று அடித்தாா். 2002-ஆம் ஆண்டு இது, ‘நூற்றாண்டின் சிறந்த கோல்’ என்று பெயா் பெற்றது.

அந்த ஆட்டத்துக்குப் பிறகு இங்கிலாந்து வீரா் ஸ்டீவ் ஹோட்ஜுடன் தனது ஜொ்ஸியை மாற்றிக் கொண்டாா் மாரடோனா. அந்த ஜொ்ஸியை கடந்த 36 ஆண்டுகளாக வைத்திருந்த அவா், அதை தற்போது விற்பதற்கு முன் வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com