கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்கள்: குஜராத் ‘த்ரில்’ வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்த குஜராத் அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
கில்
கில்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்த குஜராத் அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று விளையாடின. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹாா்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 

மயங்க் அகர்வால் 5 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் ஷிகர் தவானுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் தவான் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய அரைசதம் கடந்து அசத்தினார். 

அவர் 27 பந்துகளில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 23, ஷாரூக்கான்15, ராகுல் சகார் 22 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் ரஷித்கான் 3, தர்ஷன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கடினமான இலக்கை விரட்டிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மேத்தீவ் வாடே 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கில் - சாய் சுதர்ஷன் ஜோடி இணைந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த சுதர்ஷன் 15வது ஓவரில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின், கில்லுடன் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

வெற்றியை நெருங்கும் நிலையில், 11 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 96 ரன்கள்(59 பந்துகள்) எடுத்த கில் 19வது ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைபட்ட நிலையில் முதல் பந்திலேயே ஹர்திக் ரன் அவுட்டானார்.

இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும், மூன்றாவது பந்தில் மில்லர் ஒரு பவுண்டரியும் அடித்தார். நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது.

இறுதியில் இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் திவாடியா இரண்டு சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com