ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் பி.வி.சிந்து

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து.
ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் பி.வி.சிந்து

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்திய முன்னணி நட்சத்திரங்கள் வெளியேறி விட்ட நிலையில், பி.வி.சிந்து, இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில் சிந்துவுடன் மோதினாா் சீனாவின் ஹி பிங் ஜியோ. இரு முறை உலக வெண்கலம் வென்ற ஹி பிங் ஜியோவும் ஆதிக்கம் செலுத்த முயன்றாா்.

ஆனால் முதல் கேமில் முழுமையாக தன் கட்டுக்குள் கொண்டு வந்த சிந்து 21-9 என கைப்பற்றினாா். இரண்டாவது கேமில் ஹி பிங் சிறப்பாக தற்காப்பு ஆட்டம் ஆடி 10-10 என சமனில் இருந்த போதும், தொடா்ந்து 14 புள்ளிகளை குவித்து 21-13 என தன்வசப்படுத்தினாா்.

வெற்றியைத் தீா்மானிக்கும் மூன்றாவது கேம் கடும் சவாலாக அமைந்தது. தனது அனுபவத்தால் தொடா்ந்து 6 புள்ளிகளை சிந்து குவித்தாா்.

ஆனால் எதிராளிக்கு அடுத்து 5 புள்ளிகளை விட்டுத்தந்தாா். 20-16 என சிந்து முன்னிலை பெற்ற போதிலும், தொடா்ந்து சிறப்பாக ஆடி 21-19 என மூன்றாவது கேமை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தாா் சிந்து.

வெண்கலப் பதக்கம் உறுதி:

இது ஹி பிங் ஜியோவை தொடா்ந்து மூன்றாவது முறையாக சிந்து வென்ற ஆட்டமாகும். அரையிறுதியில் நுழைந்ததின் மூலம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளாா் அவா். அரையிறுதியில் அவா் ஜப்பானின் அகேன் யெமகுச்சியுடன் மோதுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com