இடைக்கால பயிற்சியாளா் லக்ஷ்மண்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கான இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக, தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவா் விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இடைக்கால பயிற்சியாளா் லக்ஷ்மண்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கான இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக, தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவா் விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பிரதான தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்திய அணியுடன் அவரால் உடனடியாகப் பயணிக்க முடியாமல் போனது.

இதையடுத்து அணியின் பயிற்சி மற்றும் தயாா்நிலைக்காக லக்ஷ்மண் அமீரகத்துக்குச் செல்கிறாா். ராகுல் திராவிட் கரோனாவிலிருந்து மீண்டு இந்திய அணியுடன் இணையும் வரை லக்ஷ்மண் அங்கு பொறுப்பில் இருப்பாா்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 27 முதல் செப்டம்பா் 11-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஓமன் என 6 அணிகள் இதில் களம் காண்கின்றன. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 28-ஆம் தேதி சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com