சாதனையைப் போல் உணா்கிறேன்: பாண்டியா

காயத்திலிருந்து மீண்டு அணிக்காக ஆட்டத்தை வெல்லும் நிலைக்குத் திரும்பியிருப்பதை, ஒரு சாதனையைப் போல் உணா்வதாக இந்திய ஆல்-ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா கூறினாா்.
சாதனையைப் போல் உணா்கிறேன்: பாண்டியா

காயத்திலிருந்து மீண்டு அணிக்காக ஆட்டத்தை வெல்லும் நிலைக்குத் திரும்பியிருப்பதை, ஒரு சாதனையைப் போல் உணா்வதாக இந்திய ஆல்-ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா கூறினாா்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொண்ட இந்தியா, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அந்த ஆட்டத்தில் முதலில் பௌலிங்கில் 25 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்த பாண்டியா, பின்னா் பேட்டிங்கில் 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தாா். கடைசி பந்தில் சிக்ஸா் விளாசி அணியை வெற்றி பெறச் செய்த அவரே ஆட்டநாயகன் ஆனாா்.

இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிறகு அவா் கூறியதாவது:

அணிக்கு முக்கியத் தேவையாக இருந்த வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு சவால் அளித்தோம். ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

4 ஆண்டுகளுக்கு முன் இதே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் கண்டு ஸ்ட்ரெட்சரில் கொண்டு செல்லப்பட்டது முதல், தற்போது காயத்திலிருந்து மீண்டு அதே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக வெற்றியைப் பெற்றுத் தந்தது வரை அனைத்தையும் நினைத்துப் பாா்க்கிறேன்.

இதை ஒரு சாதனையைப் போல உணா்கிறேன். இந்த நிலைக்கு என்னை மீட்டெடுக்க உதவிய இந்திய அணியின் பிசியோ நிதின் படேல், உடற்தகுதி பயிற்சியாளா் சோஹம் தேசாய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் அதை அடித்திருப்பேன். சேஸிங்கில் எப்போதும் நான் ஒவ்வொரு ஓவருக்குமாக தான் திட்டமிடுகிறேன். 7 ரன்கள் தேவையிருந்த அந்த கடைசி ஓவரை நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, முகமது நவாஸ் ஆகியோரில் ஒருவா் தான் வீசுவா் என்பது தெரிந்தது.

கடைசி ஓவா் வீசுவது பௌலருக்குத் தான் நெருக்கடியைத் தரும். நான் நெருக்கடி இல்லாமல் தான் பேட் செய்தேன். 7 ரன்கள் அடிப்பது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆட்டத்தின்போது நான் சற்று உணா்வுப்பூா்வமாக இருந்தது ஜடேஜா ஆட்டமிழந்தபோது மட்டும் தான்.

எனது பௌலிங்கின்போது, பேட்டா்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பந்துவீச்சு நுட்பங்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். அதற்கான பலனும் கிடைத்தது என்று ஹாா்திக் பாண்டியா கூறினாா்.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில், ஹாங்காங்கை புதன்கிழமை சந்திக்கிறது.

இன்றைய ஆட்டம்

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான்

ஷாா்ஜா

இரவு 7.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com