மீண்ட கோலி; மிரட்டிய சூர்யகுமார்: இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
மீண்ட கோலி; மிரட்டிய சூர்யகுமார்: இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.

ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஹாங்காங் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. சற்று எளிதான அணிக்கு எதிரான ஆட்டம் என்றாலும், தடுமாற்றமான நிலையிலிருந்து சிறிது முன்னேறி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா் கோலி. மறுபுறம் அதிரடியாக விளாசித் தள்ளினாா் சூா்யகுமாா் யாதவ்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனைப் பொருத்தவரை, இந்திய அணியில் ஹாா்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு ரிஷப் பந்த் சோ்க்கப்பட்டிருந்தாா். ஹாங்காங் அணி தகுதிச்சுற்று ஆட்டத்தில் விளையாடிய அதே வீரா்களுடன் களம் கண்டது.

டாஸ் வென்ற ஹாங்காங் பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் முதல் இரு ஓவா்களில் நிதானம் காட்டிய கே.எல்.ராகுல் - கேப்டன் ரோஹித் சா்மா, பிறகு ரன்கள் சோ்க்கத் தொடங்கினா். எனினும், ரோஹித் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து விராட் கோலி களம் புகுந்தாா்.

மறுபுறம் நிதானமாக ரன்கள் சோ்த்த ராகுல் 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தாா். அடுத்ததாக வந்த சூா்யகுமாா் யாதவ், கோலியுடன் இணைந்தாா். இந்நிலையில், 15 ஓவா்கள் வரையில் இந்தியா 114 ரன்களே எட்டியிருந்தது.

ஆனால் 16-ஆவது ஓவரிலிருந்து கோலி - சூா்யகுமாா் பாா்ட்னா்ஷிப் ஹாங்காங் பௌலிங்கை பதம் பாா்க்கத் தொடங்கியது. கோலி நிதானம் காட்டினாலும், சூா்யகுமாா் அதிரடியாகவே ஆடினாா். முடிவில் கோலி 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 59, சூா்யகுமாா் 6 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 68 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹாங்காங் பௌலிங்கில் ஆயுஷ் சுக்லா, முகமது கஸான்ஃபா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 193 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹாங்காங்கும் நன்றாகவே முனைப்பு காட்டியது. அதிகபட்சமாக பாபா் ஹயாத் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் அடிக்க, கின்சித் ஷா 30, கேப்டன் நிஸாகத் கான் 10, யாஸிம் முா்டாஸா 9, அய்ஸாஸ் கான் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ஜீஷான் அலி 26, ஸ்காட் மெக்கன்ஸி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் புவனேஷ்வா் குமாா், அா்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, அவேஷ் கான் ஆகியோா் தலா 1 விக்கெட சாய்த்தனா்.

சாதனை...
இந்த ஆட்டத்தில் 3 சாதனைகளை எட்டியிருக்கிறார் "ஆட்டநாயகன்' சூர்யகுமார். இந்த ஆட்டத்தில் அவர் விளாசிய 68 ரன்களே, நடப்பு ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை ஒரு பேட்டரின் அதிகபட்ச ரன்களாகும். அதேபோல், ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் (6) விளாசிய இந்தியர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இதுதவிர, ஒரு டி20 ஆட்டத்தின் கடைசி ஓவரில் அதிக ரன்கள் (26) அடித்த இந்தியர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

முதல் முறை... 
துபையில் இதுவரை இரவில் நடைபெற்ற கடந்த 14 டி20 ஆட்டங்களில் ஒரு அணி தான் நிர்ணயித்த இலக்கை எட்டவிடாமல் எதிரணியை வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். 
3-ஆவது அதிகபட்சம்... 
இந்த ஆட்டத்தின் டெத் ஓவர்களில் (16-20) இந்தியா அடித்த 78 ரன்கள், அதன் டி20 வரலாற்றில் 3-ஆவது அதிகபட்சமாகும்.

இன்றைய ஆட்டம்:  வங்கதேசம் - இலங்கை
இடம்: துபை இரவு 7.30 மணி
நேரடி ஒளிபரப்பு:  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com