
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் தோல்வியடைந்த பிரேஸில் அணியின் வீரர் நெய்மரை குரோஷியா அணி வீரரின் மகன் சமாதானம் செய்தார்.
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவும், பிரேஸில் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரம் (90’) கோலின்றி முடிய, கூடுதல் நேரம் (30’) 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதையும் படிக்க | அரையிறுதியில் ஆர்ஜென்டீனா: பெனால்டி கிக் விடியோ!
இந்த ஆட்டத்தில் குரோஷியாவிற்கு எதிராக நெய்மர் அடித்த கோல் அவரது 7ஆவது கோலாகும். இதன்மூலம் பிரேஸிலுக்காக அதிக கோல்கள் அடித்த முன்னாள் நட்சத்திரம் பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்தார்.
எனினும் பிரேஸில் அணி காலிறுதியில் வெற்றி பெறாததால் நெய்மர் மைதானத்திலேயே உடைந்து அழுதார்.
Ivan Perisic's son, Leo, ran over to console Neymar after the match
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.