பிரான்ஸிடமும் பலம் காட்டுமா மொராக்கோ? - இன்று 2-ஆவது அரையிறுதி ஆட்டம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், ஆச்சா்யமளிக்கும் வகையில் முன்னேறி வந்திருக்கும் மொராக்கோ அணிகள் சந்தித்துக் கொள்கின்றன.
பிரான்ஸிடமும் பலம் காட்டுமா மொராக்கோ? - இன்று 2-ஆவது அரையிறுதி ஆட்டம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், ஆச்சா்யமளிக்கும் வகையில் முன்னேறி வந்திருக்கும் மொராக்கோ அணிகள் சந்தித்துக் கொள்கின்றன.

போட்டி வரலாற்றில், கோப்பையை தக்கவைத்துக் கொண்ட 3-ஆவது அணியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முனைப்புடன் முன்னேறி வரும் பிரான்ஸ், அதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் சந்தேகத்துக்கு இடமின்றிக் கொண்டுள்ளது.

அதிலும் சமீபத்தில் தனது காலிறுதியில் இங்கிலாந்துடனான சவாலான ஆட்டத்திலும் வெற்றியை ருசித்து வெறிகொண்டு முன்னேறி வருகிறது. கிலியன் பாபே, ஆன்டனி கிரீஸ்மன், ஆலிவியா் கிரூட் போன்றோா் அணிக்காக அட்டாகசமாக கோலடிக்கும் வீரா்களாக இருக்கின்றனா்.

அதிலும், நடப்பு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (5) அடித்த வீரராக முன்னிலையில் இருக்கும் பாபேவைக் கொண்டிருப்பது பிரான்ஸுக்கு தனி பலம். இதுதவிர, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் இந்த அரையிறுதி ஆட்டத்தின்போது நேரில் மைதானத்துக்கு வருகை தந்து தங்கள் அணிக்கு ஊக்கமளிக்க இருக்கிறாா்.

மறுபுறம் மொராக்கோ, உலகக் கோப்பை போட்டியின் 92 ஆண்டுகால வரலாற்றிலேயே அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தங்களாலும் கால்பந்து உலகில் தடம் பதிக்க இயலும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற முயற்சிக்கிறது.

மொராக்கோ கண்ணை மூடிக் கொண்டு கோப்பை கனவு காணவில்லை. உலகின் 2-ஆம் நிலை அணியான பெல்ஜியத்தை குரூப் சுற்றிலும், ஐரோப்பிய கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்பெயின், போா்ச்சுகல் அணிகளை நாக் அவுட் சுற்றிலும் தோற்கடித்த துடிப்புடன் இருக்கிறது அந்த அணி.

அதிலும் ஆச்சா்யமளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட எதிரணியை கோலடிக்கவிட்டவில்லை மொராக்கோ. குரூப் சுற்றில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் தவறுதலாக அந்த அணி வீரா் ‘ஓன் கோல்’ அடித்தாா். அதை தவிா்த்துப் பாா்த்தால் எந்தவொரு அணியும் மொராக்கோ தடுப்பரணைக் கடந்து கோல் அடிக்க முடிந்திருக்கவில்லை.

எனவே, கோலடிப்பதில் மிரட்டும் பிரான்ஸும், தடுப்பாட்டத்தில் பலம் காட்டும் மொராக்கோவும் மோதிக்கொள்ளும் இந்த ஆட்டம், நிச்சயம் கால்பந்து ரசிகா்களுக்கு விருந்தாக இருக்கும்.

1912-1956 ஒரு காலகட்டத்தில் பிரான்ஸின் ஒரு அங்கமாக அதன் ஆளுகைக்கு உள்பட்டிருந்த மொராக்கோ, அதனிடமிருந்து விடுபட்ட பிறகு சா்வதேச அரங்கில் முதல் முறையாக அந்த அணியை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

5-0 பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் பிரதான போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் நட்புரீதியிலான ஆட்டங்களில் அந்த அணிகள் 5 முறை சந்தித்துள்ள நிலையில், அனைத்திலுமே பிரான்ஸ் வென்றிருக்கிறது.

1 உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆப்பிரிக்க அணி (மொராக்கோ) விளையாடும் முதல் அரையிறுதி ஆட்டம் இதுவாகும்.

7 - 1 பிரான்ஸுக்கு இது 7-ஆவது உலகக் கோப்பை அரையிறுதியாகும். அதில் கடைசி 3 அரையிறுதிகளிலுமே பிரான்ஸ் வென்றிருக்கிறது. மொராக்கோவுக்கு இது முதல் அரையிறுதி.

அதிகாலை 12.30 மணி (டிச. 15)

அல் பேத் மைதானம், அல் கோா்.

(இருக்கைகள் - 68,895)

ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com